அமெரிக்கா: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அன்னாபென் கார்ல்சன், தனது பெற்றோருடன் ஹாண்டுராசில் உள்ள பெலிஸ் கடற்கரை பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நீச்சல் விளையாட்டிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது திடீரென அன்னாபென் கார்ல்சனை சுறா மீன் தாக்கியது. கடினமாக போராடி சுறாவின் பிடியில் இருந்து மீண்டார். இருப்பினும் இந்த சம்பவத்தில் சிறுமியின் வலது கால் துண்டானது.