By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அதிரடி நடவடிக்கை இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 2 பேரை தூக்கிலிட்டது
    1 Min Read
    மக்களுக்காக நான் திரும்புவேன் – ஷேக் ஹசீனா உறுதி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!! இதோ உங்களுக்காக!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஈரான் அதிரடி நடவடிக்கை இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 2 பேரை தூக்கிலிட்டது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > ஈரான் அதிரடி நடவடிக்கை இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 2 பேரை தூக்கிலிட்டது
உலகம்

ஈரான் அதிரடி நடவடிக்கை இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 2 பேரை தூக்கிலிட்டது

Nagaraj
Last updated: August 5, 2026 11:46 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஈரான்: இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ அமைப்பிற்கு நாட்டின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு மையங்கள் குறித்த ரகசிய தகவல்களை வழங்கியதாகக் ஒமித் பெஹ்சாத் மற்றும் பூரியா சப்வாத் ஆகிய இரண்டு ஈரானிய குடிமகன்கள் ஈரான் அரசால் தூக்கிலிடப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போரின் போதும், சமீபத்திய மோதல்களின் போதும் ஈரானிய ராணுவ முகாங்களின் வரைபடங்கள், புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி உதவியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனைகள் வழங்கப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் ஈரானில் 50க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரான் மீது தீவிர ராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், பிராந்திய நட்பு நாடுகளின் வேண்டுகோள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்தத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈரான் ஈடுபடவில்லை என்றும், அண்டை நாடான ‘ஓமன்’ நாட்டின் வழிகாட்டலில் ஹார்முஸ் நீரிணையில் தற்காலிகப் பாதுகாப்பான கடல்வழிப் பாதையை அமைப்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

You Might Also Like

மக்களுக்காக நான் திரும்புவேன் – ஷேக் ஹசீனா உறுதி

TAGGED:2 பேருக்கு தூக்குdeath sentence for twoespionageIranmaritime route.No changeswift actionஅதிரடிஈரான்உளவு பார்த்தனர்கடல் வழிப்பாதைமாற்றம் இருக்காது
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?