By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
    பட்டினியால் 191 பேர் உயிரிழந்த வழக்கு! கென்யாவில் மதப் போதகர் குற்றவாளி எனத் தீர்ப்பு
    2 Min Read
    கென்யாவில் எபோலா பாதிப்பு 9 ஆக உயர்வு! கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய சுகாதாரத் துறை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
    இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமா? மும்பையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
    1 Min Read
    பங்குச்சந்தையில் சரிவு! ஜியோ ஐபிஓ எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் கவனம்
    1 Min Read
    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று இந்தியா வருகை! வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை முக்கியப் பேச்சுவார்த்தை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கை மற்றும் கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க..!!
    1 Min Read
    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் சின்ன சின்ன உடற்பயிற்சிகள்
    1 Min Read
    நோயில்லா வாழ்வு வாழ… தினமும் ஒரு கேரட்!
    1 Min Read
    சென்னையைச் சுற்றி கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா மாவட்டங்களும் உஷார்
    1 Min Read
    தஞ்சை பெரிய கோவிலில் இன்று சதய விழா கோலாகலம்! 1,041 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நாட்டியாஞ்சலி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மனதை மயக்க வைக்கும் ஆலப்புழாவிற்கு ஒரு பயணம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > மனதை மயக்க வைக்கும் ஆலப்புழாவிற்கு ஒரு பயணம்!
சுற்றுலா

மனதை மயக்க வைக்கும் ஆலப்புழாவிற்கு ஒரு பயணம்!

Nagaraj
Last updated: August 10, 2026 5:39 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கேரளா: கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்’ என்று அழைக்கப்படும் ஆலப்புழா ஓய்வுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகும். ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடும்.

ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு விடுமுறையை திட்டமிட்டு ஆலப்புழாவிற்கு சென்று, உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப்பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வூட்டும் சுற்றுலா அனுபவமாக இருக்கும். பளபளப்பான கடற்கரைகள், சாந்தம் தவழும் ஏரிகள் ஆகியவற்றுடன் மெய்மறக்க வைக்கும் படகு வீடு பயணங்கள் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன.

வருடாவருடம் ஆலப்புழாவில் நேரு கோப்பை படகுப் போட்டி விமரிசையாக நடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல படகுச் சங்கங்கள் இதில் கலந்து கொள்கின்றன. வெற்றிக்கோப்பை வழங்கும் பழக்கம் ஒருமுறை இந்த போட்டியை ரசித்த ஜவஹர்லால் நேரு அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. தற்போது 60 வருடத்தை எட்டிவிட்ட இந்த படகுப்போட்டி இன்றும் அதே உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துடன் நடத்தப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த படகுப்போட்டி நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் நிசப்தம் நிலவும் ஆலப்புழா நீர்த்தேக்கமானது இப்போட்டியின்போது பரபரப்பாக மாறுவதுடன் நகரமும் ஒரு திருவிழாக்கோலத்தை பூண்டுவிடும். ஜுன், ஜுலை மழைக்காலம் முடிந்தபின்னர் நடத்தப்படும் இந்த படகுப்போட்டி நிகழ்ச்சியின்போது ஆலப்புழா சுற்றுலாத்தலத்துக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் உகந்ததாகும்.

எங்கு திரும்பினாலும் இயற்கை எழிலுடனும், இதமான சூழலுடனும் காட்சியளிக்கும் ஆலப்புழாவில் கால் வைத்தவுடனேயே உங்கள் மனம் லேசாகி, உடலாலும் புத்துணர்வடைவீர்கள். ஆலப்புழா நகர்ப்பகுதியில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலாத்தலம் பத்திரமண்ணல் எனும் இடமாகும். ஒரு சிறிய தீவுப்பகுதியான இங்கு ஏராளமான சுவராசியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, அழிந்து வரும் பல அரிய வகை பறவைகளை இங்கு பார்க்கலாம்.

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆலப்புழா நகருக்கு செல்லலாம். விருப்பத்திற்கேற்றபடி, ரயில் அல்லது பேருந்து அல்லது விமான மார்க்கமாக பயணிகள் ஆலப்புழாவிற்கு வருகை தரலாம். விமானம் மூலம் கொச்சி விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆலப்புழா வரலாம். எல்லா முக்கிய அண்டை மாநில நகரங்களிலிருந்தும் நேரடி ரயில் சேவைகளும்,பேருந்து சேவைகளும் ஆலப்புழா நகருக்கு இயக்கப்படுகிறது

You Might Also Like

பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் கடலை மாவு!

பயணத்தின் போது உடல் உபாதைகளால் அவதிபடுகிறீர்களா? அப்போ இது உங்களுக்குதான்

வித்தியாசமான அனுபவம் தரும் பக்காலி தீவுக்கடற்கரை!

கொடைக்கானலில் கண்களை கவரும் செர்ரி மலர்கள்: சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல்

நீலகிரியில் ‘ஹோம் ஸ்டே’ பெயரில் விதிமீறலா? – அதிகாரிகளிடம் ஐகோர்ட் சரமாரி கேள்வி!

TAGGED:AlappuzhabackwatersBoatingNaturetourismஆலப்புழாஇயற்கைஉப்பங்கழிசுற்றுலாபடகுப்பயணம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

மகளிர் செய்திகள்`

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்!

By Nagaraj 2 Min Read

நோயில்லா வாழ்வு வாழ… தினமும் ஒரு கேரட்!

By Nagaraj
தமிழகம்

கை மற்றும் கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க..!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மருத்துவ குறிப்புகள்

கற்றாழையை அதிகமாக பயன்படுத்துவதால் உடலுக்கு பாதிப்பு!

கற்றாழையில் தோல் மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும், கற்றாழை இரத்த சோகையை நீக்குகிறது நோய் எதிர்ப்பு சக்தியை…

By Nagaraj
மருத்துவ குறிப்புகள்

சியா விதைகளை எலுமிச்சை சாறுடன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சியா விதைகளை எலுமிச்சைசாறுடன் கலந்து குடிக்கலாம். இந்த சிறிய விதைகளில் ஏராளமான ஆரோக்கிய…

By Nagaraj
தமிழகம்

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் சின்ன சின்ன உடற்பயிற்சிகள்

சின்ன சின்ன உடற்பயிற்சிகள், சில முயற்சிகளின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். அதுவும் 10 நிமிடங்களே போதுமானது. இதனால், உடல்…

By Nagaraj
ஆன்மீகம்

அக்டோபர் 25-ல் சரத் பௌர்ணமி! நிலவொளி வழிபாட்டின் சிறப்பு என்ன?

இந்தியாவின் பல பகுதிகளில் சரத் பௌர்ணமி ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. ஐப்பசி மாதத் தொடக்கத்தை ஒட்டிய காலத்தில் வரும்…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

ஓட்ஸ், கடலை மாவு, பன்னீர் இருந்தால் போதும்! ஆரோக்கியமான காலை உணவுக்கு சூப்பர் சில்லா

சென்னை: காலை உணவுக்கு விரைவாகவும் சுவையாகவும் ஏதாவது செய்ய விரும்புபவர்கள் ஓட்ஸ், கடலை மாவு மற்றும் பன்னீர் சேர்த்துச் செய்யப்படும் சில்லாவை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?