சென்னை: நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான முனீஸ்காந்த், தற்போது ‘தி டோர்ம்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கும் இப்படத்தில் சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ இணைந்து இசையமைத்துள்ளனர்.
குட் ஸ்டப் புரொடக்சன்ஸ் சார்பில் ஈ.ஆர். டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி தயாரித்துள்ள இப்படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
