பெல்ஜியம்: பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.
டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இங்கிலாந்து கோல் அடித்த நிலையில், இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் தில்பிரீத் சிங் கோல் அடித்து முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தனர்.
ஆனால் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
