லண்டன்: பிரிட்டனில் ஆகஸ்ட் மாதத்தில் வீடுகளின் விலை வழக்கத்தைவிட அதிகமாக சரிந்துள்ளதாக ரைட்மூவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வீடுகளின் சராசரி விற்பனை விலை 2 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான சராசரி 1.3 சதவீத சரிவை விட இது அதிகமாகும்.
லண்டனில் வீடுகளுக்கான ஆரம்ப விற்பனை விலை ஆண்டுக்கு 3.1 சதவீதம் சரிந்துள்ளது. அதிக அளவிலான வீடுகள் விற்பனைக்கு வந்திருப்பது, வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட காரணிகள் சந்தையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
2026-ம் ஆண்டுக்கான வீட்டு விலை வளர்ச்சி குறித்த தனது கணிப்பையும் ரைட்மூவ் நிறுவனம் குறைத்துள்ளது.
