வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டசபை, வரும் நவம்பர் 8-ம் தேதியை தீபாவளி நாளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சட்டசபை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்திய-அமெரிக்கர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் பண்பாட்டை போற்றும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி, ‘ஒளித் திருவிழா’ என அழைக்கப்படுகிறது. நல்ல ஆரோக்கியம், செல்வம், அறிவு, அமைதி மற்றும் செழிப்பை வலியுறுத்தும் பண்டிகையாக தீபாவளி விளங்குவதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலிபோர்னியா மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் சட்டசபை கேட்டுக்கொண்டுள்ளது.
