சென்னை: ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ படங்களை இயக்கிய கவுதம் ராஜின் அடுத்த திரைப்படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே ‘பஞ்சதந்திரம்’ படத்தில் இணைந்து நடித்துள்ள இருவரும், தற்போது முதன்முறையாக ஜோடியாக நடிக்கின்றனர். படக்குழுவினரை வாழ்த்திய ஜெயராம், சிம்ரனுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
சிம்ரனும், ஜெயராம் மிகச்சிறந்த நடிகர் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
90-களின் ரசிகர்களையும் இன்றைய தலைமுறையினரையும் கவரும் வகையில் காதல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
