சென்னை: நயன்தாரா, கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, விஷ்ணு எடவன் எழுதிய வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் கவனம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம், பின்னர் ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘குடிகார நெஞ்சு’ பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
