தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாக தெரிவித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்த 2 நாட்களில் முக்கிய மழை நிகழ்வுகள் ஏற்படும் என கூறியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், குறிப்பாக நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை நிலவுகிறது. அதே சமயம், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னையுடன் மற்ற பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெரிதும் பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 22 சென்டி மீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், குமரி கடல் பகுதியில் ஒரு UAC உருவாகப்போவதாகவும், இதனால் நிலவரம் மாற வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தகவலின் அடிப்படையில், மழை சிக்கல்களை எதிர்கொள்வதற்காக மக்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.