பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு இடையே விவாகரத்துக்கான வதந்திகளை மறுத்துள்ளார்.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டில் திருமணமாகி, 2011 ஆம் ஆண்டில் ஆராத்யா என்ற பெண் குழந்தையை பெற்றனர். திருமணத்திற்கு பிறகு, அபிஷேக் பச்சன் பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார், ஆனால் ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் நடிப்பதை பெரிதும் குறைத்துவிட்டார். சமீபத்தில், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து மீண்டும் திரையில் அசத்திருந்தார்.
சமீபத்தில் ஆனந்த் அம்பானி திருமண விழாவில், அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கலந்துகொண்டு, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா பச்சன் மட்டும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் பிறகு, சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே மனஸ்தாபங்கள் மற்றும் சச்சரவுகள் உள்ளதாகச் செய்திகள் பரவின. இதற்கிடையில், இருவரும் விவாகரத்துக்குப் பெற போகிறார்கள் எனவும் கூறப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அபிஷேக் பச்சன், “நான் இன்னும் திருமணமானவன்தான்! எங்களுக்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வதந்திகளுக்கு நான் எந்தப் பதிலும் சொல்லப்போவதில்லை. நீங்கள் இதைப் பெரிதாக்கிக் கொண்டு, வதந்திகளை பரப்புகின்றனர். பிரபலங்களாக, நடிகர்களாக இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது.”