By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
    1 Min Read
    “ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
    1 Min Read
    விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?
    1 Min Read
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தங்கத்தை மிஞ்சும் புலசா மீன்! ஒரு மீன் ரூ.27 ஆயிரத்துக்கு ஏலம் – கோதாவரியில் வரத்து குறைந்ததால் விலை எகிறல்
    1 Min Read
    வங்கி வாடிக்கையாளர்களே கவனம்! செப்.28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் – செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்
    1 Min Read
    இந்தியாவுக்கு அடுத்த 6 மாதங்கள் சவால்? ‘சூப்பர் எல் நினோ’வால் 15,800 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆய்வு!
    1 Min Read
    அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி
    1 Min Read
    தனியார் ஒருவர் கைகொடுத்தார்… கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்! ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அசிடிட்டி பிரச்சனையை உடனே விரட்டும் கிராம்பு
    1 Min Read
    சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய என்ன செய்யணும் தெரியுங்களா?
    1 Min Read
    சரும பாதுகாப்பிற்கும் உறுதுணையாக நிற்கும் தேன்
    2 Min Read
    பாதங்களை சரியாக, அழகாக பராமரிக்க சில யோசனைகள்
    1 Min Read
    தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியா? – 18 ஆயிரம் பணியாளர்கள், 6 ஆயிரம் மின்மாற்றிகள், புதிய பேட்டரி திட்டம்!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடா? – “ஆலோசித்து முடிவெடுப்பதே ஜனநாயகம்” என பா.ஜ.க. பதில்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடா? – “ஆலோசித்து முடிவெடுப்பதே ஜனநாயகம்” என பா.ஜ.க. பதில்
இந்தியா

தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடா? – “ஆலோசித்து முடிவெடுப்பதே ஜனநாயகம்” என பா.ஜ.க. பதில்

Nagaraj
Last updated: September 24, 2026 2:12 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க., தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசித்து முடிவெடுப்பது இயல்பான ஜனநாயக நடைமுறை என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு இடையே சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அரசியல் விவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பித் பத்ரா, தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு விவாதித்து முடிவெடுப்பது ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதிதான் என கூறினார்.

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை சுட்டிக்காட்டிய அவர், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுபட்டிருக்கும் என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

இதனிடையே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. தேர்தல் கமிஷனர்கள் சில முடிவுகளில் ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக வெளியான தகவல்களும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில், எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட அனைத்து முடிவுகளுக்கும் மூன்று கமிஷனர்களின் ஒப்புதல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வுகளையும் சம்பித் பத்ரா சுட்டிக்காட்டினார். முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் பின்னர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளின் மாறுபட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

 

You Might Also Like

தங்கத்தை மிஞ்சும் புலசா மீன்! ஒரு மீன் ரூ.27 ஆயிரத்துக்கு ஏலம் – கோதாவரியில் வரத்து குறைந்ததால் விலை எகிறல்

வங்கி வாடிக்கையாளர்களே கவனம்! செப்.28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் – செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

இந்தியாவுக்கு அடுத்த 6 மாதங்கள் சவால்? ‘சூப்பர் எல் நினோ’வால் 15,800 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆய்வு!

அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி

தனியார் ஒருவர் கைகொடுத்தார்… கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்! ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்

TAGGED:BjpElection CommissionElection ControversySambit Patrasirvoter listஎஸ்ஐஆர்சம்பித் பத்ராதேர்தல் ஆணையம்தேர்தல் சர்ச்சைபாஜகவாக்காளர் பட்டியல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?