சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் மற்றும் ஹைஸ்ட் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் படத்துக்கு ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.
ஜேசன் சஞ்சய்யின் முதல் இயக்குநர் முயற்சி என்பதால், ‘சிக்மா’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
