இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டியும் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் 10-வது இயக்கப் படமாக உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இது கார்த்திக் சுப்பராஜ்–இளையராஜா கூட்டணியில் உருவான முதல் படமாகவும் குறிப்பிடப்படுகிறது.
படத்தை பார்த்த மம்மூட்டி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் பணியை பாராட்டியுள்ளார். இதற்கு கார்த்திக் சுப்பராஜும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், பாக்ஸ் ஆபீஸில் சீரான நிலையை படம் பதிவு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
