நேபாள பிரதமர் பலேந்திர ஷா இன்று இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
நேபாள பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவருடன் நிதி அமைச்சர் உள்ளிட்ட 34 பேர் கொண்ட குழுவும் இந்தியா வருகிறது.
இந்தப் பயணத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேபாள பிரதமர் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா – நேபாள உறவுகளை மேம்படுத்துவது, வர்த்தகம், சுற்றுலா, சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து இணைப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய நட்புறவை மேலும் வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அவர் நேபாளத்திற்குத் திரும்புகிறார்.
