இந்திய ரயில்வேயின் அதிவேக ரயில் திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 160 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

கோட்டா–நாக்தா வழித்தடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிவேக இயக்கம் மட்டுமின்றி அவசரகால பிரேக்கிங் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் சோதிக்கப்பட்டுள்ளன.
நீண்ட தூர இரவு நேர பயணத்தை வேகமாகவும் வசதியாகவும் மாற்றும் நோக்கில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை வெற்றி திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
