நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில், தனது கல்லூரி கால வாழ்க்கை குறித்து பேசியுள்ள ஜேசன் சஞ்சய், வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தபோது சுமார் ஒன்றரை ஆண்டுகள் காதல் உறவில் இருந்ததாகவும், பின்னர் இருவரும் பரஸ்பர புரிதலுடன் பிரிந்ததாகவும் கூறியுள்ளார்.
இயக்குநராக தனது முதல் படமான ‘சிக்மா’ மூலம் திரைத்துறையில் புதிய பயணத்தை தொடங்கும் ஜேசன் சஞ்சய் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
