பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மொகாமா புதிய இரட்டை ரயில் பாதை பாலம் ரயில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.2,400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம், பழைய ராஜேந்திர சேதுவுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பாலத்தின் மூலம் இரண்டு புதிய ரயில் பாதைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், டெல்லி–ஹவுரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து திறனை அதிகரிக்க முடியும்.
பீகாரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையிலான ரயில் இணைப்பையும் இந்த புதிய பாலம் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
