மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என அக்கட்சியின் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்சி நிர்வாகிகளுடன் பேசியதாகவும், தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் முடிவு இன்று வெளியாகும் நிலையில், அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
