வங்கி வேலைக்கான தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக கூறப்படும் பல மாநில கும்பலை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
டெல்லி, பீகார், ஹரியானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டதாக கூறப்படும் இந்த கும்பலில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிஜிஎஸ்டி அதிகாரி ஒருவரும் இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
எழுத்துத் தேர்வு முதல் நேர்முகத் தேர்வு வரை பல்வேறு கட்டங்களில் ஆள்மாறாட்டம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
