ஊட்டி: நடிகை கீர்த்தி சுரேஷ், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்குப் புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. குறிப்பாக, பாடல் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளுக்காகப் பல திரைப்படக் குழுவினர் இந்த மலைப்பகுதியைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது ஊட்டி படப்பிடிப்பு அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடைசியாக ரிங் மாஸ்டர் படத்துக்காக ஊட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் உருவாகும் ஜனவரி 12 விடுதலா திரைப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஊட்டிக்குச் சென்றுள்ளார்.. பல ஆண்டுகளாக அவர் நடித்த திரைப்படங்களில் எதுவும் ஊட்டியில் படமாக்கப்படாமல் இருந்தது ஆச்சரியமான விஷயம்.
ஊட்டியின் இயற்கை அழகு, குளிர்ச்சியான காலநிலை, மலைப்பாதைகள் ஆகியவை திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு ஏற்ற சூழலை வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷின் புதிய படத்தில் ஊட்டியின் அழகிய இடங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. படத்தின் காட்சிகள் மற்றும் வெளியீடு குறித்த அடுத்தடுத்த தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
