கனடா: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள வெய்ன்ரைட் ராணுவத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியாகாத நிலையில், ராணுவத் தளத்தில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெய்ன்ரைட் நகருக்கு அருகே அமைந்துள்ள ராணுவத் தளத்தில் அக்டோபர் 17-ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீ விபத்து குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்கின்டியும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.
