நடிகர் பிரபுதேவாவும் நடிகை சிம்ரனும் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு இயக்கும் இப்படம் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகிறது. சென்னை மற்றும் மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபுதேவாவின் நடனத் திறமையும், சிம்ரனின் நடிப்பும் இணைவதால் இருவரையும் திரையில் மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர்களுடன் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் முதல் பார்வை தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
