சென்னை: மகாராஷ்டிராவின் பாரம்பரியச் சடங்குகள் மற்றும் நாட்டுப்புறக் கலை மரபுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோந்தல்’ திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சந்தோஷ் தவாகர் எழுதி இயக்கியுள்ள இந்த மராத்தி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் பாரம்பரியமான கோந்தல் சடங்கு மற்றும் நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ஏற்கெனவே மராத்தி மொழியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் 2027-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிராந்தியக் கலை மரபுகளையும் கலாசாரத்தையும் மையமாகக் கொண்ட படைப்புகள் பல மொழி ரசிகர்களிடம் சென்றடைவதற்கு மொழிமாற்ற வெளியீடுகள் உதவுகின்றன.
