சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47வது பிறந்த நாளை கேக் வெட்டி ரயில்வே அதிகாரிகள் கொண்டாடி உள்ளனர்.
1977 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை – மதுரை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகள் ஓட்டுனர்களுக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர்.
அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலாகும்.