சென்னை; முகப்பருக்கள் மறைய இயற்கையிலேயே பல வழிகள் உள்ளன. அதில் சில உங்களுக்காக.
பெண்கள் பலர் முகப்பருவால் அவதியடைந்து வருகின்றனர். முக அழகை குறைப்பதில் முகப்பரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் பருக்கள் மாறி முகம் பளபளப்படைய சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினமும் குளிக்கும் போது பயன்படுத்தினால் பரு மாறி முகம் பளபளப்பாகும்.
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும். துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் முக பருக்கள் மறையும்.
சந்தனத் தூள் 25 கி, வெட்டி வேர் 100 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சமஅளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் பெறும்.
ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தழும்புகள்உள்ள இடத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.