தனது புதிய இமேஜ் ஜெனரேஷன் AI மாடலான Imagen 3 ஐ வியாழக்கிழமை கூகுள் வெளியிட்டது. இது டெக்ஸ்ட்-டு-இமேஜ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வார்த்தைகளை படங்களாக மாற்றும் திறன் கொண்டதாகும். ஆனால், கூகுள் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த மாடல் தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. பயனர்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் பதிவு செய்தபின், உருவாக்க வேண்டிய படங்களை அனுப்ப முடியும். Imagen 3 மாடல், டெக்ஸ்சர் ஜெனரேஷன் மற்றும் சொற்களைப் புரிந்துகொள்ளும் திறன்களை மேம்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய AI மாடலின் பயனர் அனுபவங்கள் mixed செய்திகளைக் கொண்டதாக உள்ளன. சிலர், “ஒரு கப் காபி வைத்திருக்கும் பையன்” என்ற எளிமையான கட்டளையை வழங்கியபோது, மாடல் தவறான முடிவுகளைத் தருவதாகக் கூறியுள்ளனர்.
மற்றொரு பயனர், நிகான் டிஎஸ்எல்ஆர், கோப்ரோ ஸ்டைல், வைட் ஆங்கிள் லென்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களில் படங்களை உருவாக்க முடியுமென தெரிவித்துள்ளார், ஆனால் குறைந்த வெளிச்சம் மற்றும் குளோஸ்-அப் படங்களில் சவால்களைப் கூறினார்.
மேலும், கூகுளின் ஜெமினி சாட்போட் மூலமாகவும் படங்களை உருவாக்க முடியும். ஆனால் Imagen 3 மாடல், படங்களை உருவாக்க சிறந்த பயிற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.