நடிகை ஒய்.விஜயா, தனது புதிய பேட்டியில் தனது வாழ்க்கை மற்றும் திரைப்பட பயணத்தைப் பகிர்ந்துள்ளார். “என் கணவர் காலேஜ் பிரின்ஸிபிள், எனவே என் பொண்ணுக்கு நடிகையாக வந்ததை விரும்பவில்லை. கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். என்கூட பிறந்தது ஒன்பது பேர். எனக்கு நான்கு சகோதரிகள், ஒரு தம்பி மற்றும் நான்கு இளைய சகோதரர்கள் உள்ளனர்.
அந்தப் பத்து பிள்ளைகளை வளர்க்க மிகவும் கடினமாக இருந்தது, குறிப்பாக ஆறு பெண் குழந்தைகள். நான் நடிக்க ஆரம்பிச்ச பிறகு வருமானத்துல எல்லாரையும் கவனிக்க ஆரம்பிச்சேன். பிறகு, லயோலா கல்லூரியில் என் தம்பிகளை நன்றாகப் படிக்க வைக்க உதவினேன். அக்கா எல்லாரையும் கல்யாணம் பண்ணி வைச்சேன். இன்று அனைவரும் வெளிநாட்டில் நன்றாக இருக்கிறார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தற்போது, “ஆடிவெள்ளி” ரீமேக் குறித்து எதுவும் தெரியாது. ஒய்.விஜயாவின் பொண்ணுக்கு நடிப்பு துறையில் வர விருப்பம் இல்லை என்பதால், கல்வியில் கவனம் செலுத்துகிறார். “நான் கத்தோலிக்க கிறிஸ்தவர், ஆனாலும் அனைத்து கோயிலுக்கும் போவேன். எனக்கு மூடநம்பிக்கைகள் கிடையாது, எல்லா கடவுளும் ஒரேதேனா என்பதை நம்புகிறேன்,” என ஒய்.விஜயா கூறினார்.