அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் தன்னுடைய x பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் இரண்டு முறை பாலம் விழுந்தாலும், பெண்கள் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவது கிடையாது.
இதைவிட கலைஞர் கருணாநிதியை பாராட்டக்கூடிய 100 ரூபாய் நாணயம் தான் அந்த டபுள் இன்ஜின் சர்க்காருக்கு முக்கியமானதாக திகழ்கிறது. அனைத்து சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் 100 ரூபாய் நாணயத்திற்காக இந்தியா கூட்டணி மற்றும் சிறுபான்மையினரை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.
பணம் மற்றும் அதிகாரத்திற்காக பாஜக மற்றும் திமுக எதையும் செய்யும். ஆனால் இதில் மக்களும் கட்சிக்காரர்களும் தான் ஏமாறுகிறார்கள். சித்தாந்தம் பகுத்தறிவு குப்பை தொட்டிக்கு சென்று விட்டது. மேலும் வெக்கங்கெட்ட பாஜக, வெக்கங்கெட்ட திமுக, நீ சூரியன் நான் தாமரை போன்ற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.