தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கர நாராயணசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே அன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்காது.
சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சிவன் கோவில்களில் ஒன்றாகும். 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பல இடங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்த விடுமுறை அறிவிப்பின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வு, ஆவணங்கள் தொடர்பான அலுவலக பணிகள் அனைத்தும் சீராக நடைபெற வாய்ப்பில்லை.
சங்கரநாராயண சாமி கோவிலில் பூலித்தேவர் அறை அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னதிக்கும் சங்கரநாராயணன் சன்னதிக்கும் நடுவே புலித்தேவர் அறை உள்ளது. இது நுண்ணிய மரத்தால் கட்டப்பட்டுள்ளது.
சங்கர நாராயணசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.