நடிகை துஷாரா விஜயனின் பீப் சாப்பிடும் உணவுப் பழக்கம் குறித்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு “போதையேறி புத்திமாரி” படத்தின் மூலம் அறிமுகமான துஷாரா, பா.ரஞ்சித் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.
“நட்சத்திரம் நகர்கிறது” படத்தில் ரெனேவாக நடித்து பாராட்டு பெற்ற துஷாரா, “கழுவேத்தி மூக்கன்,”, “அநீதி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது “ராயன்”, “வேட்டையன்” படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே “வீர தீர சூரன்” படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் பீப்ஸ் சாப்பிடுவது குறித்த வீடியோ சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நான் கோழி சாப்பிடுவது போல பீப் சாப்பிடுகிறேன். தயிர் சாதம் சாப்பிடுபவர்களிடம், ‘தயிர் சாதம் சாப்பிடுகிறீர்களா’ என்று கேட்க முடியாதா? ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி வாழ்கிறார்கள். தயிர் சாதம் சாப்பிடுற மாதிரி நான் பீப் சாப்பிடுறேன். இதுல என்ன பிரச்சனை இருக்கு?” என்று துஷாரா விஜயன் வீடியோவில் கூறியுள்ளார்.
துஷாரா “நட்சத்திரம் நகர்கிறது”படத்தில் நடித்த ரெனே கேரக்டர் பற்றிய விமர்சனங்களை நேர்மையாக எடுத்துக்கொள்கிறார். அவர் பேசுகையில், “சமூகப் பொறுப்புள்ள நபராக, அதைப் பற்றி பேசுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இயக்குனர் சொன்னதை செய்தேன். அந்த கேரக்டரில் நடித்ததில் பெருமைப்படுகிறேன்,” என்றார்.