இதய நோய்கள் வராமல் தடுப்பதில் இப்பழத்துக்கு பெரும் பங்கு உண்டு.. காரணம் நாவல் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதாவது 100 கிராம் நாவல் பழத்தில் 55 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. எனவே, இந்த பழம் தமனிகள் சரியாக செயல்பட உதவுகிறது, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களைத் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் நிறைந்த இப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம். இப்பழத்தில் இனிப்பின் அளவும் மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழத்தின் விதையை நன்றாக அரைத்து, தினமும் ஒரு கிராம் வெதுவெதுப்பான நீரில் காலை, மாலை குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
இந்த பழம் அதிக சிறுநீர் கழித்தல் மற்றும் தாகம் உள்ளிட்ட நீரிழிவு நோயின் அறிகுறிகளை குணப்படுத்துகிறது. நாவல் பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த பழம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, நாவல் பழங்களை சாப்பிடும் போது, தொற்றுகள் நம்மை எளிதில் பாதிக்காது. ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. ஈறு, பற்கள், பிரச்சனைகளுக்கு நாவல் பழம் சாப்பிட்டாலே போதும்.