தேவையான பொருட்கள்:
கெட்டியான பால் – 1/2 லிட்டர்
பால் பவுடர் – 1/4 கப்
சர்க்கரை – 1/4 கப்
அகர் அகர் – 5 கிராம்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு நாண்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 லிட்டர் கெட்டியான பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் பால் பவுடரை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கிளறி விட வேண் டும். அதுவும் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து அதில் அகர் அகர் சேர்த்து நன்கு கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பின் அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 8 நிமிடம் அகர்அகர் கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின் ஒரு டம்ளரை எடுத்து, அதில் நெய்யை தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி, வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பின், ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 2 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அதுவே ப்ரீசர் என்றால் 1 மணிநேரத்தில் தயாராகிவிடும். ஒருவேளை ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால், 3 மணிநேரம் அப்படியே வைத்துவிட்டால், தயாராகிவிடும். இறுதியில் டம்ளரில் செட்டாகியுள்ள கடம்புவின் முனைகளை கத்தியால் கீறிவிட்டு, குப்புற போட்டு தட்டினால், சுவையான பால் கடம்பு தயார்.