சென்னை: ஒற்றைத் தலைவலியால் தினமும் அவதிப்படுறீங்களா? நிரந்தர தீர்வு கிடைக்க இதை மட்டும் ஃபாலோ செய்து பாருங்கள்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக முறையற்ற உணவு பழக்கம் மற்றும் அதிகரித்த வேலை பளு, மன அழுத்தம் காரணமாக தான் இது ஏற்படுகின்றது. இதற்கு நிரந்தர தீர்வு காண நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில் அதிக வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் காரணமாக நம்முடைய உணவை தவிர்க்க ஆரம்பிக்கலாம். இது குறைந்த இரத்த சர்க்கரை அளவு காரணமாக தலைவலி ஏற்பட வழி வகுக்கும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் பொதுவான தூண்டுதலாகும். தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சி போன்ற பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கும். பிரகாசமான விளக்குகள் மற்றும் ஒளிரும் விளக்குகள், அதிக சத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான தூண்டுதல்கள்.
தலைவலியின் போது முடிந்த வரை இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். பிரகாசமான ஒளி தூண்டுதலை தவிர்க்க ஒளியின் குறிப்பிட்ட அலை நீளங்களை வடிகட்டக்கூடிய வண்ண கண்ணாடிகள் அல்லது சிறப்பு ஒற்றை தலைவலி கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம் .
வாசனை திரவியங்கள் மற்றும் துப்புரவு பொருட்கள் என கடுமையான வாசனை தலைவலியை தூண்டும். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் கடுமையான வாசனை பொருட்களை தவிர்க்க வேண்டும்.