சேலம்: எம்ஜிஆர் வரலாறு தெரியுமா? தெரியாதா? அண்ணாமலை பிறப்பதற்கு முன்பாகவே கட்சி ஆரம்பிச்சாச்சு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதற்காக இந்த பதிலடி? வாங்க தெரிஞ்சுக்குவோம்.
சேலத்தில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியார்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் நாணய வெளியீட்டு விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம்தான் இருந்தது. ஆனால் அந்த விழாவை மத்திய அரசு நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
நான் திமுக அரசை குற்றம் சாட்டினால் பாஜக தலைவர் என்னை குறை சொல்கிறார். மத்திய அரசிலிருந்து ஆட்சியாளர்கள் வந்து நாணயம் வெளியிட்டதால்தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை பிறப்பதற்கு முன்பாகவே எம்ஜிஆர் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து விட்டார். அண்ணாமலை எம்ஜிஆர் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். மத்தியில் 55 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 165 லட்சம் கோடியாக மாறியுள்ளது.
பாஜக கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு நலத்திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கடன் சுமையை தான் அதிகரித்துள்ளது. மேலும் பாஜகவை போன்ற திமுகவும் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.