சென்னை: கோதுமையை கொண்டு கோபி பரோட்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்
காலிஃப்ளவர் (கோபி)
துருவல் – கால் கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை: கோதுமை மாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடிவைக்கவும். துருவிய காலிஃப்ளவருடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே ஸ்டஃபிங் ஆகும்.
பிறகு, மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வோர் உருண்டையையும் கிண்ணம் போல செய்து, அதன் நடுவே ஒரு டேபிள்ஸ்பூன் காலிஃப்ளவர் ஸ்டஃபிங் வைத்து, நன்றாக இழுத்து மூடவும். பின்னர் சற்றுக் கனமான பரோட்டாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, தேய்த்த பரோட்டாக்களைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த கோபி பரோட்டோ தயார்.