லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, தயாநிதி மாறன், எம்.பி., வளர்ச்சி நிதியை முழுமையாக செலவிடவில்லை என, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதனால் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். உடனடியாக எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தனது வழக்கறிஞர் குழுவுடன் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி ஜெயவேல், விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையில், 70 வயதான அவர் உடல்நலக் காரணங்களுக்காக மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொள்வதால் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளார்.
பழனிசாமி தனது வயது மற்றும் உடல் நிலையைக் குறிப்பிட்டு, வழக்கை தாமதப்படுத்தவோ, இழுத்தடிக்கவோ எண்ணம் இல்லை என்றும், நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.