அகமதாபாத் / ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் வதோதரா பகுதிகள் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பருவமழையின் சராசரி மழையளவு 883 மி.மீ. மழை அளவைப் பொறுத்தவரை கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் (ஆகஸ்ட் 24 முதல் 26 வரை) 20 சதவீத மழை பெய்துள்ளது.
மேலும் கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 94 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும். வெள்ளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என மொத்தம் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும், பல்வேறு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நடைமேடைகளில் காத்திருக்கின்றனர். சுமார் 33 விமானங்கள் தாமதமாக வந்தன. 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பருவமழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பிரதமர் மோடி, “கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது.
மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.