ஜப்பான்: ஷின்ஷான் புயல் 216 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷின்ஷான் புயல் மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் ஜப்பானின் கியூஷு பகுதியில் கரையை கடந்ததாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழையால் ககோஷிமா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மியாசாகி மாகாணத்தில் கட்டடங்கள் மற்றும் மின்கம்பிகள் சேதமடைந்த நிலையில், அதில் பலர் காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.