புதுடெல்லி: பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூப் சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தன் மீது பதிவு செய்யப்பட்ட 16 எப்ஐஆர்களையும் ரத்து செய்யக் கோரி யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கும், இரண்டாவது எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர் குமணன், ”யூடியூபர் சங்கர் குறித்து, வீடியோவில், உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆண் போலீசார், பெண் போலீசார் என, அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பிறப்பித்த உத்தரவில், “யூ டியூபர் சங்கர் மீது பதிவான 16 எப்.ஐ.ஆர்.,களை ரத்து செய்ய முடியாது.
ஆனால், அனைத்தையும் இணைத்து ஒரே வழக்காக ஏன் விசாரிக்கக்கூடாது. இதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
மேலும், ஷங்கர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர்.களின் விவரங்களையும் ஒரு சிறிய அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.