தேவையானவை:
கடலை மாவு – 1 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1
இஞ்சி – 1 இன்ச்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் தூள் – 1 சிட்டிகை
கரம் மசாலா – 1 சிட்டிகை
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும். பிறகு பெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாகக் கலக்கவும். ஆம்லெட் கலவை மிதமானதாக இருக்க வேண்டும், மிகவும் தண்ணீராக இருக்கக்கூடாது. இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் ஆம்லெட் கலவையை ஊற்றி லேசாக பரப்பவும். பிறகு ஆம்லெட்டைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி, கீழே பொன்னிறமாகவும், மிருதுவாகவும் வந்ததும், தோசைக் கரண்டியைப் பயன்படுத்தி புரட்டவும். முன்னும் பின்னும் மொறுமொறுப்பாக இருந்தால் சுவையான தக்காளி ஆம்லெட் ரெடி.