விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’.
தமிழில் ‘சூர்யாஸ் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா தயா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை விமர்சகர்கள் உட்பட அனைவரும் பாராட்டினர். அவருடைய நடிப்பால்தான் இந்தப் படம் காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்கவில்லை. விழாவில் பேசிய நானி, “இந்தக் கதை சூர்யாவின் கதை என்பதை விட தயாவின் கதை என்று நம்புகிறேன்.
இதை படப்பிடிப்பின் போது இயக்குனரிடம் சொன்னேன். ஆனால் அவர் நம்பவில்லை. இப்போது நடந்ததில் மகிழ்ச்சி.
நான் நடித்த படத்துக்கு என்னை விட எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய பாராட்டு கிடைத்ததுதான் இந்தப் படத்தில் இருந்து நான் எடுத்து வைக்கும் பெரிய விஷயம், இது எனக்கு பெரிய சந்தோஷம் மட்டுமில்லாம தனி அனுபவமும் கூட” என்றார் நானி.