சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயம் தீவுப் பகுதியில் நேற்று பயிற்சி சுற்றுகளுடன் தொடங்கியது.
தெற்காசியாவில் நடைபெற்ற முதல் இரவு சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும். இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பந்தயத்தின் கடைசி நாளான நேற்று பிரதான சுற்று நடைபெற்றது. ஃபார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப் இரண்டு பந்தயங்களில் நடைபெற்றது. ரேஸ் 1-ல் 16 ஓட்டுநர்கள் இருந்தனர். ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் டிரைவர் அலிபாய் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீக்கப்பட்டார்.
போட்டி தொடங்கியதும் கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. 240 கி.மீட்டருக்கு மேல் கார்கள் பறந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரேஸ் 1-ல், காட்ஸ்பீடு கொச்சியின் ஹக் பார்டர் பந்தயத்தில் 19:50.952 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
பெங்கால் டைகர்ஸ் அணியின் ரூஹான் 19:50.251 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தையும், பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ் அணியின் அபய் மோகன் 20:09.021 வினாடிகளில் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சென்னை டர்போ ரைடர்ஸ் அணியின் இஷாக் டிமெல்வீக் 20:11.408 வினாடிகளில் கடந்து 5-வது இடத்தை பிடித்தார்.
ஃபார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்புடன், இந்திய ரேசிங் லீக் மற்றும் ஜேகே ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகியவை நடைபெற்றன. மின்லுாரில் மதியம் துவங்கி இரவு 10.30 மணி வரை நடந்த இப்போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த பந்தயங்களை அணியின் உரிமையாளர்களான சவுரவ் கங்குலி, நாக சைதன்யா, அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நேரில் பார்த்தனர்.