சென்னை: பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேமுதிகவின் 20-வது ஆண்டு விழா வரும் செப்டம்பர் 14-ம் தேதி நடக்கிறது. அந்த நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிரமாண்ட விழாவாக கொண்டாட வேண்டும்.
அதன்படி, தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கும் விழா, கட்சியின் 20-வது ஆண்டு விழா, விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் விழாவை ஒருங்கிணைத்து முப்பெரும் கட்சி பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்.
விழாவையொட்டி, கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இதற்கு காவல் துறையின் அனுமதியை முறையாக பெற்று மாலையில் பொதுக்கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.