புதுடெல்லி: காஷ்மீர் சட்டசபை தேர்தல் செப்., 18, 25, அக்., 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கிறது.
இத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே 9 வேட்பாளர்களை அறிவித்திருந்தது. காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 2-ம் கட்டப் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் உள்ளனர்.
காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மத்திய ஷல்தெங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், ரியாசியில் மும்தாஜ் கான், மாதா வைஷ்ணோ தேவி தொகுதியில் பூபேந்தர் ஜம்வால், ரஜோரியில் இப்திகார் அகமது, தன்மண்டியில் ஷபீர் அகமது கான், சூரன்கோட் தொகுதியில் முகமது ஷாநவாஸ் சவுத்ரி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.