லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர், உபேந்திரா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து சண்டைக்காட்சியை சென்னையில் படமாக்கினர். தற்போது படத்தின் முக்கிய காட்சிகளை விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படமாக்கிக் கொண்டிருந்தனர்.
சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விரைவில் தொடங்கவுள்ளது.
மழை கொஞ்சம் ஓய்ந்ததும் நடிகர்கள் மீண்டும் தேதிகளைப் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.