பாட்னா: ”அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,” என, நேற்று, ஆர்.எஸ்.எஸ்., கருத்து தெரிவித்திருந்தது.
இது குறித்து பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் போஸ்டில், “ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று சொல்ல அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் பயன்பெறும் வகையில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவர்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும்,” என்றார்.