சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா மீது நடிகை ரிமா கல்லிங்கல் புகார் கூறியுள்ளார். மேலும் மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இளம் நடிகைகளுக்கு தான் போதை விருந்து அளித்தாக பேட்டி ஒன்றில் பாடகி சுசித்ரா தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனக்கூறி சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகார் அளித்துள்ளதாக மலையாள நடிகையும், தயாரிப்பாளருமான ரிமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுசித்ரா மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாகவும் ரிமா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.