நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நலத்திட்டம் மற்றும் மாநில ஆயுஷ் குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பணி விவரங்கள்:
– ஆயுஷ் மருத்துவ அதிகாரி
– மருந்து வழங்குபவர் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி)
– பல்நோக்கு பணியாளர்
– ஆயுஷ் மருத்துவர் (சித்தா)
– சிகிச்சை உதவியாளர்
கல்வித் தகுதி:
– ஆயுஷ் மருத்துவ அதிகாரி: ஆயுஷ் மருத்துவப் படிப்பு மற்றும் பதிவு
– மருந்து வழங்குநர்: மருந்தகத்தில் டிப்ளமோ
– பல்நோக்கு பணியாளர்: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
– சிகிச்சை உதவியாளர்: நர்சிங் தெரபிஸ்ட் படிப்பு
சம்பள விவரம்:
– ஆயுஷ் மருத்துவ அதிகாரி: ரூ.34,000
– மருந்தாளுனர்: ஒரு நாளைக்கு ரூ.750
– பல்நோக்கு பணியாளர்: ஒரு நாளைக்கு ரூ.300
– ஆயுஷ் டாக்டர்: ரூ.40,000
– சிகிச்சை உதவியாளர்: ரூ.15,000
தேர்வு செயல்முறை: நேர்காணல் அடிப்படையில்
விண்ணப்பிக்கும் முறை: www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் கிடைக்கும். கடைசி தேதி: 17.09.2024
தொடர்புக்கு: மாவட்ட சுகாதார அலுவலர், நாமக்கல் – 637 003, தொலைபேசி: 04286 – 281424