சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வானவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து செப்டம்பர் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணமாக ரூ.200-ஐ செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படாவிட்டால், அத்தகைய விண்ணப்பதாரர் முதன்மைத் தேர்வில் தோன்ற விரும்பவில்லை எனக் கருதப்படுவார் மற்றும் அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.